
Dynamism of a Dog on a Leash, 1912
ஒரு சீமாட்டி தன் நாயை இழுத்துச் செல்வதைக் காட்டும் இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கிறது. வரைந்தவர் இத்தாலிய ஓவியர் ஜாக்கோமோ பாலா (Giacomo Balla, 1871-1958).
Dynamism of a Dog on a Leash என்ற தலைப்பே ஓவியரின் நோக்கத்தைச் சொல்கிறது. சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்படும் நாய், சங்கிலி, சீமாட்டியின் கால்கள், இருவரும் மிக வேகமாக நடக்கும் தரை ஆகியவை இயங்குவதைச் சித்தரிக்கிறார் பாலா.
இயக்கத்தை உறைய வைத்து வரைவது பாலாவும் அவரது காலத்து ஓவியர்களும் தொடர்ந்து செய்துகொண்டிருந்த ஒரு வேலை. இந்த flip book எஃபெக்ட் அந்தக் காலத்திலேயே புகைப்படத்தில் சாத்தியம் என்றாலும் அது இந்த ஓவியத்தைப் போல அழகாக இருக்க முடியாது.
ஒரு பணக்காரப் பெண், விலையுயர்ந்த ஒரு நாயை சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லும் காட்சியை பல ஃப்ரேம்கள் கொண்ட ஒரு புகைப்படமாகக் கற்பனை செய்து பார்த்தாலும் இந்த ஓவியத்தின் நேர்த்தி அதில் வர முடியும் என்று தோன்றவில்லை.
ஓவியர் இயக்கம் என்ற வறட்சியான ஒரு ‘சயின்ஸ்’ சமாச்சாரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு அலங்காரத் தன்மையைச் சேர்த்து அதை மேலும் சுவாரஸ்யமாக்குகிறார்.
நாயின் கால்கள், வால் இரண்டாலும் உருவாகும் அரை வட்டங்களும் அந்தச் சங்கிலியால் ஏற்படும் வடிவங்களும் இந்தக் காட்சியில் இயந்திரத்தனம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றன. அவர்களின் இயக்கத்தில் மறைமுகமாகப் பங்கு பெறும் தரை கூட சமதளமாக இருப்பது போல் ஒரு தோற்றம் வருகிறது.
இந்த ஓவியம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வந்த இன்னொரு மிகப் பிரபலமான ஓவியம், மார்செல் த்யுஷாம்ப்பின் ‘மாடிப் படிகளில் இறங்கும் நிர்வாணப் பெண்’…

March 17, 2007 at 7:46 pm
ஓவியத்தைவிட உங்கள் விளக்கம் அருமை. மாடிப்படியில் இறங்கும் நிர்வாணப் பெண் ஓவியத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அதன் பின்னணி புரிகிறது.
March 17, 2007 at 8:30 pm
நிர்வாணப் பெண் படம் வந்தபோது ஒரு விமர்சகர் அதை “Explosion in a shingle factory” என்று கிண்டல் செய்தாராம்.