பெரும்பாலும் புள்ளிகளையும் சிறிய மற்றும் பெரிய கோடுகளையும் வைத்து இந்த அற்புதமான படத்தை வரைந்திருக்கிறார் வான் கோக்.
இரண்டு வருடங்கள் கழித்து 1890இல் அவர் வரைந்த ‘காக்கைகளுடன் கோதுமை வயல்’ என்ற ஓவியம் இன்னும் பிரபலம். சதுர வடிவ கான்வாஸ்கள் இரண்டை சேர்த்து வைத்தது போன்ற ‘Double Square canvas’இல் இதை அவர் வரைந்திருக்கிறார்.
மிக அடர்த்தியான தூரிகைத் தீற்றல்கள், குழம்பிய, இருண்ட ஆகாயம், வலப்பக்கத்திலிருந்து வரும் காக்கைக் கூட்டம் (ஒவ்வொரு காக்கையும் ஒன்றிரண்டு கோடுகளில் வரையப்பட்டிருக்கின்றன), ஒரு வித வேகத்துடன் நெளிந்து செல்லும் பாதைகள் ஆகியவை உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனநிலையைப் பிரதிபலிப்பது போல் இருக்கின்றன.
‘த ஸ்டாரி நைட்‘டில் இருப்பது போன்ற சுழலும் தீற்றல்களை இதில் (வானில்) பார்க்கலாம். படத்தின் இன்னொரு தலைப்பு: Wheatfield Under Threatening Skies.
இரண்டு ஓவியங்களும் பெரிதாக்கிப் பார்க்க வேண்டியவை.

