டச்சு-பிரெஞ்சு ஓவியர் வான் கோக் (‘வான்கா’ அல்ல) படைத்த The Starry Night என்ற இந்த ஓவியம்தான் கலை என்று ஒரு உலகம் இருப்பதை எனக்குக் காட்டியது.
முதன்முதலில் இந்த ஓவியத்தைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியும் பரவசமும் ஏற்பட்டன. மனித இருப்பையும் இயக்கத்தையும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிரபஞ்சம் (இயற்கை) தன்பாட்டுக்கு மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் குரூரம் ‘ஸ்டாரி நைட்’டில் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றியது. அதனால்தான் அதிர்ச்சி.
பரவசம், இந்த ஓவியத்தின் அழகைப் பார்த்து வந்தது. ஓவியத்தின் இடது பக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்த மரம், படத்தில் மூன்றில் இரண்டு பங்கைப் பிடித்திருக்கும் பெரிய நட்சத்திரங்கள், இரண்டிற்கும் இடையிலான மலைகள் என்று எல்லாமே சுழல்வதும் நெளிவதுமாகப் படு தீவிரத்துடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன. முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்தபோது, கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்ததில் அதிலிருந்து மிகப் பெரிய ஓசை வருவது போலவே எனக்குத் தோன்றியது. ஓயாத ஒரு பேரியக்கத்திலிருந்து எழும் இரைச்சல் அது.
வான் கோகின் டிரேட்மார்க்கான அடர்த்தியான, பிசிறான தீற்றல்களின் முரட்டுத் தன்மை, இந்த ஓவியம் சொல்லும் செய்தியின் குரூரத்தை அதிகரிக்கிறது.
ஸ்டாரி நைட்டிற்குப் பிறகு பல சிறந்த படைப்புகளைப் பார்த்தேன். ஆனால் ஸ்டாரி நைட் தந்த அனுபவம் வேறு எந்த ஓவியத்திலும் எனக்கு இது வரை கிடைக்கவில்லை.

February 27, 2007 at 3:50 am
அட்டகாசமான துவக்கம். இடைவிடாமல் இப்படியான அறிமுகங்களைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். சிறுபத்திரிக்கைத் தனமின்றி எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி அறிமுகம் செய்கிறீர்கள். நன்று.
February 27, 2007 at 5:35 pm
என்ன இது வம்பாப் போச்சு! எனக்கு எளிய தமிழ்தான் தெரியும்! சிறுபத்திரிகைத் தமிழ் கற்றுக்கொண்டால்தான் வரும் என்று நினைக்கிறேன். நான் கற்றுக்கொள்ள விரும்பவில்லை.
என் அமெச்சூர் எழுத்துக்கு உங்கள் கருத்து மிகவும் தெம்பூட்டுகிறது. நன்றி!
March 1, 2007 at 5:35 pm
ஓவியங்கள் குறித்த ஆர்வந் தரும் வலைப்பதிவு. இந்தத் தமிழே நல்லா இருக்கு :-)
தொடருங்கள்..
March 1, 2007 at 5:36 pm
also, just curious:
why u named ‘பிறழ்வு’ to this blog..
March 1, 2007 at 5:41 pm
இது ‘மனப் பிறழ்வு’ என்பதில் வரும் பிறழ்வு அல்ல. இந்த ஜீனியஸ் கலைஞர்கள் எல்லாருமே மரபிலிருந்து விலகியிருப்பதால் விலகல் அல்லது deviation என்ற பொருளில் பிறழ்வு என்று பெயரிட்டேன். விலகல் ரொம்ப சாதாவாகத் தெரிந்தது.
பெரியவர்களெல்லாம் வந்து உற்சாகமூட்டுவதற்கு நன்றி!
March 17, 2007 at 7:01 am
kalai parti nalla mozhi nadaiel erkku.
oru edhazhil oru artist mattum ezhudhinal nandraga erukkum
March 17, 2007 at 3:12 pm
நீங்கள் சொல்வதும் சரிதான். அதனால்தான் நான் கூடுதலாகப் போடும் படத்தைப் பற்றிச் சொல்வதைப் பெரும்பாலும் தவிர்க்கிறேன். கருத்துக்கு நன்றி!